மீன்பிடி துறைமுகங்களில் தற்போது சேகரித்து வைக்கப்பட்டுள்ள மீன்களை உரிய மீன் சந்தைகளுக்கு அல்லது பல பகுதிகளுக்கு விநியோகம் செய்தல் தொடர்பிலும் குறித்த மீன்களை உரிய சந்தைகளுக்கு கிடைக்கச் செய்வதற்கான சிறப்பு சுகாதார வழிமுறைகளை உள்ளடக்கியும் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக பல பகுதிகளிலும் மீன்பிடித் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் சில பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் தொடர்ந்தும் அவ்வாறு மீன்பிடி நடடிவக்கைகளை நிறுத்துவது குறித்து இன்னும் எந்த முடிவுகளும் எடுக்கப்படாதுள்ள காரணத்தினால் சேகரித்து வைக்கப்பட்டுள்ள மீன்களை சந்தைகளுக்கு விநியோகிப்பதற்காக இந்த சிறப்பு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் போது பூரண சுகாதார நடைமுறைகள் குறித்து சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் உள்ளுர் சந்தைகளில் மீன்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM