உங்களுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் வேலைகளையும் ஒரே இடத்திலிருந்து செய்துகொள்ள சிறந்த வழியை ஏற்படுத்திக்கொடுக்க முன்வந்திருக்கிறது www.hellojobs.lk இணையத்தளம்.

இன்றைய பொருளாதாரத்திற்கான தீர்வாகவும் உங்களது அறிவையும் திறனையும் கொண்டு மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் www.hellojobs.lk எனும் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு 03, ரேணுகா ஹோட்டலில் கடந்த 6 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்ட www.hellojobs.lk இணையத்தளம் எதிர்காலத்தில் மக்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்ளக்கூடியதாக இருக்குமென  நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ. ருக்னுடீன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

வேலை இல்லாமை, சிக்கனத்தை நாடும் வாடிக்கையாளர்கள் மற்றும் சலிப்புத்தனமையை ஏற்படுத்தும் இணையம் ஆகிய மூன்றையும் அரைத்துப் பிழிந்தால் உங்களுக்கு வரும் தலைவலிக்கு தீர்வாகவே www.hellojobs.lk அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விற்பனை அட்டைகளை வடிவமைக்க ஒருவர் வேண்டும். பின்னால் கரணம் அடிக்கும் நீச்சல் முறையை சொல்லித்தர ஒருவர் வேண்டும். இலங்கையில் இருந்து அழகான தபால் அட்டையொன்றை அனுப்ப ஒருவர் வேண்டும். 5 டொலர்கள் செலவில், இவ்வாறான வேலைகளைச் செய்ய விருப்பமானவர்களை தேடித்தருவதே இந்த www.hellojobs.lk இணையத்தளத்தின் நோக்கமாகும்.

இந்த தளத்தில் எவரும் இலவசமாக சேரலாம். சேர்ந்த பின் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின் எந்த வேலைக்கு ஆள் தேவை என்பதை தேடிப்பார்த்து உங்களுக்கு அது முடிந்தால் அதனைச் செய்து கொடுத்துவிட்டால் உங்கள் பக்கெட்டில் 5 டொலர்கள். எத்தனை எளிது என பார்த்தீர்களா?

இணையமானது விசாலமானது. எல்லையில்லாமல் பரந்து வியாபித்துள்ளது. ஆரம்பத்தில் இணையம் 9 முதல் 5 என்ற அலுவலக நேர அட்டவணையில்தான் இருந்தது. இப்போது அது 24/7 என்று எங்கும் நிறைந்து விட்டது. ஆரம்பத்தில் இணையத்தினூடாக ஒருசில விடயங்களை மட்டுமே செய்யக்கூடியதாக இருந்தது. தற்போது இணையத்தினூடாக என்ன செய்ய முடியாது என்று கேள்வியை எழுப்பி எதையும் செய்யலாம் என்ற கட்டத்திற்கு மாறியிருக்கிறது.

இலங்கையிலிருந்து கனடாவில் உள்ள ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டையொன்றை அனுப்ப வேண்டும். உங்கள் ஜாதகத்தை உங்களுக்கு கணித்துச் சொல்ல வேண்டும். சமையல் பாடத்தை உங்களுக்கு சொல்லித்தர வேண்டும். உங்களுக்கு விருப்பமான பாடல்களை எழுதித்தர வேண்டும். வீட்டிலிருந்துகொண்டே வைத்தியரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

இதுபோன்ற தொல்லை இல்லாத வேலைகளை 5 டொலர்கள் செலவில் உங்களுக்கு செய்துதர உதவுவதுதான் www.hellojobs.lk இணையத்தளம். இதுபோன்ற தொல்லையில்லாத வேலைகளை மற்றவர்களுக்கு செய்துதர இப்போது நிறையப்பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருமணி நேரத்தில் ஒருவர் இதுபோன்ற இரண்டு வேலைகளை செய்து முடிக்கலாமென தெரிகிறது. அப்படியானால் உங்களது ஓய்வுநேரத்தில் 5, 10, 15 டொலர்கள் என எளிதில் சம்பாதிக்கலாம். அதன்மூலம் உங்களது இணத்தளத்தின் எல்லையை விரிவுபடுத்திக்கொள்ளலாம். எனவும் அவர் குறிப்பிட்டார்.