வாழைச்சேனையில் 50 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக  கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரீ.எம்.நஜீப் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (24) ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 11 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, 11 நபர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஐம்பது பேருக்கு நேற்று (25) பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் இதுவரை 27 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.