இந்தியா -  அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ மற்றும் பாதுகாப்பு செயலர்  மார்க் டி எஸ்பர் ஆகியோர் இன்று புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர்.

இருநாடுகளுக்கு இடையேயன உறவை வலுப்படுத்தும் விதமாக, 3வது ஆண்டாக இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இந்திய விஜயத்தை நிறைவு செய்தப் பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலர் மைக்கல் ஆர். பொம்மியோ மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலர் மார்க்டி. எஸ்பர் இலங்கைக்கு நாளை (27.10.2020) வருகை தரவுள்ளனர்.

குறித்த விஜயத்தின் போது கொழும்பில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையி கலந்து கொள்ளவுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த மிக உயர்ந்த அமெரிக்க பிரமுகராக இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ விளங்குகிறார்.