பதுளை ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கற்பட்ட உனுகொல்ல தோட்ட வனப்பகுதிக்கு இனந்தெரியாத விசமிகளினால் தீ வைக்கப்பட்டமையினால் 20க்கும் அதிகமான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது.

பதுளை மாவட்டத்தில் மிகவும் வெப்பத்துடனான காலநிலை காணப்படுவதனால் சில சமூக விரோதிகளினால் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்படுகின்றது.  இதனால் நீரேந்தும் பிரதேசங்களில் நீர் இல்லாமல் போவதால் வறட்சி நிலவுகின்றது.

 எனவே சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து தகவல் தருமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் உதயகுமார தெரிவித்துள்ளார்.