மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுப் பெண்ணொருவர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் இன்று (26) இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த குறித்த பெண்ணின் உடல் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஓட்டமாவடி முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.