ஹட்டன் -டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள நகரசபைத் தலைவர்  எஸ்.பாலச்சந்திரன் அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

ஹட்டன் மீன் வர்த்தகரான கொரோனா தொற்றாளரின் வர்த்தக நிலையத்துக்கு கடந்த வாரம்  அவர் சென்றிருந்தமை அறியப்பட்டிருப்பதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னர் அவர் சென்ற இடங்கள் சந்தித்த நபர்கள் தொடர்பில் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

மேற்படி பொது சுகாதார பரிசோதகர் அவரது உத்தியோகபூர்வ குடியிருப்பில் தனிமைப்படுத்தப்படுவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவ ர் மேலும் தெரிவித்தார்.