“விளம்பரத்துறை டிஜிட்டல் மயமடைந்துவருகிறது. பாரம்பரியமாக காணப்படும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை விளம்பரங்களில் நிறுவனங்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கு மேலதிகமாக இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் தமது முதலீடுகளை முன்னெடுப்பது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றன” என பேட்ஸ் விளம்பர முகவர் நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிமல் குணவர்தன தெரிவித்தார்.

இவ்வாறு விளம்பரத்துறையில் வாடிக்கையாளர்களின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமது நிறுவனத்திலும் மாற்றங்களை ஏற்படுத்த தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதற்காக “Let’s Transform” என தாம் தொனிப்பொருள் சூட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நிறுவனங்களின் விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மத்தியில் இந்த டிஜிட்டல் ஊடகத்துறை தொடர்பில் அதிகளவு ஈடுபாடு மற்றும் நம்பிக்கை போன்றன ஏற்பட வேண்டும்.

அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் தான், நிறுவனங்களுக்கு வெற்றியளிக்கக்கூடிய, பயனளிக்கக்கூடிய விளம்பர உத்திகளை விளம்பர முகவர் நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கக்கூடியதாக இருக்கும். அத்துடன் விளம்பரத்துறை சார்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்வுகளை எடுத்துக்கொண்டாலும் அவற்றிலும் குறித்த விளம்பர கருத்திட்டமொன்றை தெரிவு செய்யும் போது அந்த கருத்திட்டம் டிஜிட்டல் துறையுடன் தொடர்புகளை கொண்டுள்ளதா என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.” என்றார்.

பேட்ஸ் விளம்பர நிறுவனத்தில் இந்த புதிய டிஜிட்டல் நுட்பங்களை பின்பற்றி வாடிக்கையாளர்களின் விளம்பர செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தற்போது ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிமல் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

1993 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பேட்ஸ் விளம்பர நிறுவனம்ரூபவ் கொழும்பு 05, திம்பிரிகஸ்யாய வீதியில் தனது அலுவலகத்தைக் கொண்டுள்ளதுடன், பல முன்னணி அரச, தனியார் நிறுவனங்களின் விளம்பர தொடர்பாடல் பங்காளராகவும் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.