சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் சூர்யா போற்று. இந்த படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி. மோகன் பாபு. பரேஷ் ரவேல். விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக். டீஸர், பாடல்கள், லிரிக்கல் வீடியோ ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் 12 ஆம் திகதியன்று அமேசான் பிரைம் என்னும் டிஜிற்றல் தளத்தில் வெளியாகிறது. 

இதனை முன்னிட்டு இன்று இப்படத்தின் முனனோட்டம் வெளியானது.  இதில் ‘வானம் என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா.. ப்ளைட்ட இறக்குடா .. நா பாத்துக்குறேன்..’ போன்ற வசனங்கள் இருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. வெளியான சில மணித் தியாலங்களில் இணையத்தில் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

திட்டமிட்டப்படி படமாளிகையில் வெளியாகவில்லை, திட்டமிட்டப்படி டிஜிற்றல் தளத்திலும் வெளியாகவில்லை, இப்படத்திற்கு இந்திய விமானத்துறையிடமிருந்தும் முழுமையான ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இப்படி பல தடைகளைக் கடந்து இப்படம் நவம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியாகிறது. 

இதனால் வழக்கத்தை விட இந்த படத்தைப் பார்க்க சூர்யாவின் ரசிகர்கள் ஐந்து இலட்சம் பேர் இந்த அமேசான் பிரைம் என்னும் செயலியை இந்திய மதிப்பில் 400 ரூபாய் கொடுத்து பதிவிறக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதனிடையே நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிப்பது உறுதியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.