இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் தனது 17வது வருடாந்த பொதுக்கூட்டம்: ZOOM வலைதளத்தின் ஊடாக சந்திப்பு

26 Oct, 2020 | 12:50 PM
image

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் தனது 17வது வருடாந்த பொதுக்கூட்டத்தை  இம்மாதம் 21ஆம் திகதி (21.10.2020) Zoom வலைதளத்தின் ஊடாக காணொளி சந்திப்பை நடாத்தியது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஒருங்கிணைந்த பங்காளர்களான  இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம்இ சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி  அதன் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி குமார் லோபேஸ் 2019 இற்கான ஆண்டறிக்கையை சமர்பித்ததோடு, 2019 ஆம் ஆண்டு  ஓர் வெற்றிகரமான ஆண்டாக இருந்த அதேவேளை தாம் பிரதானமாக  கவனம் செலுத்திய  கலங்கலான ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர் நிபுணத்துவம், வெளிப்படைத்தண்மை மற்றும் பொறுப்புக்கூறல்இ சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் பல மேம்பாடுகளை அடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும் ஊடக நெறிமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் பத்திரிகை அறிக்கையிடல் நடைமுறைகளை நிபுணத்துவம் செய்யும் நோக்குடன் அச்சு ஊடகங்களின் சுய கட்டுப்பாடு நடைமுறையை சுய பிரதிபலிப்பு செய்யும் செயல்முறையையும் இது உள்ளடக்கியிருந்தது.

ஜனநாயக கொள்கைகளுக்கு சார்பான ஒரு தகவலறிந்த பொதுமக்களை உருவாக்குதல் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் இலட்சியமாகும்.  அந்தவகையில் அதன் தலையீடுகளில் முக்கியமானது சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் தகவல் அறியும் உரிமை (RTI)  தொடர்பாக விழிப்புணர்வை பரப்புதல் ஆகும். தகவலறியூம் உரிமைக்கான  உதவிப்பிரிவானது செய்தி அறைகளுக்கும், தகவலறியூம் உரிமை தொடர்பான பத்திரிகையாளர்கள் மன்றங்களுக்கும் தொடர்ந்து ஆதரவூ வழங்குவதற்காகவூம்,  ஊடகவியலாளர்கள் மத்தியில் தகவல் அறியூம் உரிமை பயன்பாட்டை வலுப்படுத்துவதனையும் நோக்காகக்கொண்டு நிறுவப்பட்டது.  தகவலறியும் உரிமை தொடர்பாக இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் தொடர்பாடல் குறித்து  நாடு முழுவதுமுள்ள பல மாவட்டங்களிலும் மேற்கொண்ட செயல்திட்டங்கள் பலவும் வெற்றிக்கதைகளாகவே நிறைவேறியதாக தலைமை நிர்வாக அதிகாரி  குமார் லோபேஸ் குறிப்பிட்டார். 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது டிஜிட்டல் முன்னணியில்  தங்கள் இருப்பை விரிவுபடுத்தி வருகிறது.  அதிக ஈடுபாட்டுடன் சமூக ஊடகங்கள் மற்றும் rtisrilanka.lk, changemaker.lk  ஆகிய பிரத்தியேக இணையத்தளங்கள் மூலமாக தகவலறியூம் உரிமை தொடர்பாகவூம், thecatamaran.org மூலமாக சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவூம் பரந்தளவில் வளர்ந்துவரும் வாசகர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. 

நோர்வே, அமெரிக்காஇ ஜேர்மனி போன்ற வெளிநாட்டு அமைப்புகள் பலவற்றுடன்  ஒருங்கிணைந்து செயல்திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டுள்ளன.  உதாரணமாக நோர்வேயின் ஊடகவியலாளர் சங்கம் (NUJ) திறந்த சமூக அறக்கட்டளை (OSF) யூனெஸ்கோ, சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிமாற்றுச் சபை(IREX), மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பில் ஊடகங்கள்(MiCT), USAID  மற்றும் IOM போன்ற அமைப்புகளை குறிப்பிடலாம். மேலும் “அதியுயர்  ஊடக விருதுகள்" இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தோடு இணைந்த ஒரு கூட்டு நிகழ்வென்றும்இ கடந்த வருடம் இதன் 20 ஆவது பதிவூ 2019 டிசம்பர் 10ஆம் திகதி  மேற்கொள்ளப்பட்டதென்றும் லோபேஸ் தெரிவித்தார். 

இலங்கை பத்திரிகை வெளியீட்டாளர் சங்கத்தின் குமார் நடேசன் தலைவராகவும், சிங்ஹ ரட்ணதுங்க துணைத் தலைவராகவும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் மனிக் டி சில்வா மற்றும் மோகன்லால் பியதாச, சுதந்திர ஊடக இயக்கத்தின் செல்வி. சீதா ரஞ்சனி, உதய களுபத்திரண மற்றும் தாஹா முஸாமில் ஆகியோரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின லசந்த ருஹுனுகே மற்றும் துமிந்த சம்பத் ஆகியோரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளார்களாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர். 

Ernest and Young Global Limited பத்திரிகை ஸ்தாபனத்தின் கணக்காய்வாளர்களாகவும் F.J. &G de Seram’s Corporate Services (Private) Limited (CSL)  பத்திரிகை ஸ்தாபனத்தின் செயலாளர்களாகவும் மீண்டும் நியமிக்கப்பட்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right