பிரேஸில் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ தான், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

 40 வயதான ரொனால்டினே தற்போது அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

பிரேஸில் அணி 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் ரொனால்டினோ.

பிரேஸிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும் வென்றுள்ளார்.

மேலும், உலகப் புகழ் பெற்ற பார்சிலோனா அணியிலும் இவர் விளையாடியுள்ளார்.

பராகுவே நாட்டிற்குள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நுழைய முயன்ற குற்றச்சாட்டுக்காக ரொால்டினோவும் அவரது சகோதரர் ரோபர்டோவும் கடந்த மார்ச் மாதத்தில் கைதானமையும் குறிப்பிடத்தக்கது.