தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விப்­ப­து நியா­ய­மா­ன­து : மங்­க­ள   

Published By: Priyatharshan

11 Dec, 2015 | 10:01 AM
image

விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கிய தலை­வர்­க­ளையும் சர்­வ­தேச புலி இணைப்­பா­ளர்­க­ளையும் பாது­காத்­துக்­கொண்டு சாதா­ரண மக்­களை தண்­டி­த்தமை எந்த விதத்­திலும் நியா­ய­மற்­றது. சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள தமிழ் கைதி­களை விடு­விப்­பது எந்­த­வி­தத்­திலும் நாட்டை பாதிக்கும் செயற்­பாடோ அல்­லது சட்­டத்தை மீறும் செயலோ அல்ல. ஆகவே இவர்­களை விடு­விக்­கப்­பட வேண்டும் என்­பது நியா­ய­மான கருத்­தாகும் என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

நேற்று வெளி­வி­வ­கார அமைச்சில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பல் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­வுடன் விடு­தலைப் புலி­களின் பலர் கைது­செய்­யப்­பட்­டனர். ஆனால் விடு­த­லைப்பு புலி­களின் முக்­கிய தலை­வர்­களை முன்னாள் அர­சாங்கம் தண்­டிக்­க­வில்லை. மாறாக கடந்த அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியல்ன் முக்­கிய பத­வி­களை வழங்­கி­யதுஇ அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கொடுத்து அவர்­களை பாது­காத்­தது. இந்த தலை­வர்கள் விடு­தலைப் புலி­க­ளுடன் நேர­டி­யான தொடர்­பு­களை வைத்­தி­ருந்­த­வர்கள். அதேபோல் சர்­வ­தேச மட்­டத்­திலும் புலி­களின் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­வர்கள் என்­பது அனை­வ­ருக்­குமே தெரியும்.

எனினும் இன்­று­வரை சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் கைதிகள் மீது எந்­த­வித குற்­றச்­சாட்­டு­களும் இல்லை. இவர்­களை சந்­தே­கத்தின் பேரில் தான் கைது­செய்­துள்­ளனர். அதேபோல் இந்த கைதிகள் யுத்த கால­கட்­டத்தில் நேரடித் தொடர்­பில்­லாத உத­வி­களை செய்­த­வர்கள் என்ற சந்­தேகம் மட்­டுமே உள்­ளது. ஆகவே அவர்­களை விடு­விப்­பது எந்­த­வி­தத்­திலும் நாட்டை பாதிக்கும் செயற்­பாடோ அல்­லது சட்­டத்தை மீறும் செயலோ அல்ல. ஆகவே இவர்­களை விடு­விக்­கப்­பட வேண்டும் என்­பது நியா­ய­மான கருத்­தாகும்.

மேலும் நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்பில் நாம் கூடிய கவனம் எடுத்து செயற்­பட்டு வரு­கின்றோம். அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பிலும் அல்­லது அமைப்­பு­களின் தடை நீக்கம் தொடர்­பிலும் நாம் அவ­தா­னத்­து­ட­னேயே செயற்­பட்டு வரு­கின்றோம். எந்த சந்­தர்­பத்­திலும் நாட்டை குழப்பும் நட­வ­டிக்­கை­களை நாம் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை.

மேலும் இர­க­சிய முகாம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆரம்­பத்தில் தெரி­வித்­தி­ருந்தார். அதன் பின்னர் இந்த விப­ரங்கள் வெளி­வர ஆரம்­பித்­தன. ஆகவே எமது அர­சாங்­கத்­திற்கு இர­க­சி­ய­முகாம் தொடர்பில் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் நாம் அவ­ருக்கு நன்­றி­களை தெரி­விக்­கின்றோம். அதேபோல் இப்­போதும் யாழ்ப்­பா­ணத்தில் இர­க­சிய வதை முகாம் ஒன்று உள்­ள­தாக கூறி­யி­ருக்கும் விவ­காரம் தொடர்பில் சரியான ஆதாரங்களை முன்வைத்தால் நாம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஆதாரங்கள் இல்லாது எம்மால் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.ஆகவே எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31