நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளை வேன் கலாசாரத்தின் பிதா மகன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே  என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

வெள்ளை வேன் கடத்தல் விவ­காரம் தொடர்பில் சாட்­சி­ய­ம­ளிக்க முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று நீதி­மன்றில் ஆஜ­ரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷ ஒரு முரட்டுதனமான மனிதர். அவரே வெள்ளை வேன் கலாசாரத்திற்கு காரணமானவர். இது உண்மை. இந்தை கருத்தை ஒரு போதும் மாற்றி கூறமாட்டேன் என்றார். 
வெள்ளை வேன் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் மேன்வின் சில்வா செய்த முறைப்­பாடு மற்றும் தக­வல்­க­ளுக்கு அமை­வா­க, கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றத்­தினால் அனுப்­பி­வைக்­கப்­பட்ட அறி­வித்­த­லுக்கு அமை­வாகவே அவர் அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.
2011 ஆம் ஆண்டு முகத்­து­வாரம் பிர­தே­சத்தில் வெள்ளை வேனில் மூவர் கடத்­தப்­பட்ட சம்­பவம் தொடர்பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ஆட்­கொ­ணர்வு மனு மீதான சாட்சிப் பதி­வுகள் இடம்­பெற்று வரும் நிலையில், கடத்­தப்­பட்ட மூவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் மேர்வின் சில்­வாவை சாட்­சிக்கு அழைக்­கு­மாறு இதன் போது கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பிலப்­பிட்­டிய உத்­த­ர­விட்டார்.
இது தொடர்பில் முழு­மை­யான தக­வலைக் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் மேர்வின் சில்வா வழங்­க­வில்லை எனவும் கடிதம் மாத்­தி­ரமே வழங்­கி­யுள்­ள­தா­கவும் புல­னாய்வுப்பிரிவு நீதி­மன்றில் அறி­வித்­தது.
இந் நிலையில் வெள்­ளைவேன் கடத்தல் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் உள்ள அனைத்து ஆவ­ணங்­க­ளையும் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கு­மாறு இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி 26 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.