ஓமானின் தேசிய விமான சேவையான “சுல்டானேட் ஓமான்” ஒக்டோபர் 25 முதல் அதாவது நேற்று முதல் இலங்கை, குவைத், பஹ்ரைன் ஆகியவற்றுக்கான சேவைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விமானம் கொழும்பு, குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றுக்கு வாரத்துக்கு இரண்டு முறை சேவைகளை வழங்கவுள்ளது. 

இந்த மாத தொடக்கத்தில், ஓமான் ஏர் டெல்லி, மும்பை மற்றும் கொச்சி, இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் ஆகிய பகுதிகளுக்கான சேவையை மீண்டும் ஆரம்பித்தது.

இந்த விமான சேவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு omanair.com என்ற இணையத்தளத்தை பார்வையிடலாம்.