'தில்லுக்கு துட்டு' படத்தை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு 'இடியட் 'என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய திரைப்படம் 'இடியட்'. இந்த படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். 

ராஜா சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, விக்ரம் செல்வா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் மிர்ச்சி சிவாவும், நிக்கி கல்ராணி பேயை கட்டிப்போட்டு தூக்கிச் செல்வது போல் உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த படம் நகைச்சுவை கலந்த பேய் படம் என்பது தெரியவருகிறது. இதனால் இப்படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.