பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கிருமி தொற்று நீக்கம் செய்வதற்காக இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு  பாரராளுமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளின் சமையலறை மற்றும் சிற்றுண்டிச்சாலைக்கு பொறுப்பான சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாரராளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டில் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.