கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொஸ்கொட பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் சேவை புரியும் இரு பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளானமை வெளிப்படுத்தப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.

அத்துடன் குறித்த பொலிஸாருடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

இதன் பின்னர் கொஸ்கொட பொலிஸ் நிலைய வளாகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பிரிதொரு பொலிஸ் குழு வரழைக்கப்பட்டு பொலிஸ் மீண்டும் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது கொஸ்கொட பொலிஸ் நிலையம்.

கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் 6 பொலிஸ் அதிகாரிகள் ஹபராதுவவில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய அதிகாரிகளை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.