அவுஸ்திரேலியாவில் கொரோனா இல்லாத மாநிலமாக மாறிய விக்டோரியா 

Published By: Digital Desk 3

27 Oct, 2020 | 07:09 PM
image

அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் முதல் முறையாக புதிய கொரோான தொற்று நோயாளர்கள் பதிவு செய்யப்படவில்லை.

அவுஸ்திரேலியாவில் இரண்டாவது அலையின் மையமாக இந்த மாநிலம் இருந்தது. இங்கு நாட்டில் 905 இறப்புகளில் 90% க்கும் அதிகமானவை  பதிவானது.

விக்டோரியாவில் ஜூலை மாதத்தில் ஒரு நாளைக்கு 700 க்கு மேற்ப்பட்ட கொரோனா தொற்றுக்கள் பதிவானது. ஆனால்  கடுமையான விதிமுறைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவை கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளன.

அவுஸ்திரேலியா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மெல்போர்னில் மாநில அதிகாரிகள் விரைவில் கட்டுப்பாடுகளை குறைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நகரின் வடக்கில் ஒரு சிறியளவிலான கொரோானனா பரவல் காரணமாக தாமதமாகியுள்ளதாக பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தள்ளார்.

ஆனால் திங்களன்று மாநில சுகாதாரத் துறையினால் புதிய கொரோனா தொற்றுக்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் மாநிலம் முழுவதும் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 

கொரோனா தொற்று இல்லாத சூழலை மக்கள் கொண்டாடுகின்றனர்.சமூக வலைத்தளத்தில் #CovidVic மற்றும் #DoughnutDay - பூஜ்ஜிய எண்ணைக் குறிக்கும் ஹேஸ் டெக்குகள் பிரபலமாகி வருகிறது.

செயல்திறன்மிக்க பரிசோதனை மற்றும் வைரஸைக் கண்டுபிடிப்பதற்கான தடங்களுடன் பொது முடக்கத்தை பயன்படுத்துவதற்கான அணுகுமுறையை அவுஸ்திரேலியா பின்பற்றியுள்ளது.

25 இலட்சம் சனத்தொகையை கொண்ட அவுஸ்திரேலியா  சுமார் 27,500 தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது . இது பல நாடுகளை விட மிகக் குறைவு. அத்தோடு  900 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளது.

நாளாந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஐ  தாண்டிய பின்னர், ஜூலை தொடக்கத்தில் மாநில அரசாங்கம் மெல்போர்னை அதன் இரண்டாவது முடக்கல் நிலைக்கு தள்ளியது. நோய்த்தொற்றுகள் வீழ்ச்சியடையத் தொடங்குவதற்கு முன்பு, ஒரு மாதத்திற்குப் பிறகு உயர்ந்தன.

நகரத்திற்கு வெளியே வைரஸ் பரவியதால், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் வீட்டிலேயே தங்குவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் மெல்பர்னியர்கள் ஒரு இரவு நேர ஊரடங்கு உத்தரவு, வெளிப்புற உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேர வரம்பு, மற்றும் தங்கள் வீட்டிலிருந்து 5 கிலோ மீற்றருக்கு (3.1 மைல்) மேல் பயணிக்க தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், பெரும்பாலான சில்லறை கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதோடு, பெரும்பாலான வீட்டு வருகைகள் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது.

நாட்டை முடக்கும் நிலை உலகின் மிகக் கடினமான ஒன்றாகும் - நகரவாசிகளிடையே கருத்தைப் பிரித்து சிறிய எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளது.

சமீபத்திய வாரங்களில், பல வணிக உரிமையாளர்களும் மற்றவர்களும் அரசை முடக்கல் நிலையை தளர்த்த அழைப்பு விடுத்துள்ளனர், ஆனால் மற்றவர்கள் பிரதமரின் எச்சரிக்கையான அணுகுமுறையை ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52