இலங்கையில் 16 வது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது,

 கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதான ஆண் நபரே இன்று அதிகாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 02 ஐ சேர்ந்த குறித்த நபர், கடந்த 23 ஆம் திகதி சுகயினம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இந்த வாரத்தில்  இலங்கையில் பதிவான 3 வது  மரணம் இதுவாகும்.