தமிழ் உலக அரங்கில் சிறந்த இராஜதந்திரியாகவும் அரசியல் வல்லுரநராகவும் விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் பெரும் தலைவர் என்று ஐ.தி.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், 

தமிழ் உலக அரங்கில் சிறந்த இராஜதந்திரியாகவும் அரசியல் வல்லுநராகவும் விளங்கும் திருமலை சம்பந்தன் பல ஆண்டுகளாக தமிழ் தேசியத்தை நிலைநிறுத்த தீவிரமாகப் போராடி வருகிறார். வரலாற்றுப் பெருமை மிக்க திருமலை பெற்றெடுத்த பெரும் புதல்வன். 

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு துணிகரமாக முன்வந்து தலைமை தாங்கி சாதனை படைத்தவர். தமிழ் மக்களதும், தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக வயது முதிர்ந்த நிலையிலும் தனது பாராளுமன்றப் பதவியை பேணிவருபவர்.

வயது முதிர்ந்த நிலையிலும் பதவி ஆசைபிடித்த நிலையில் உள்ளார். என்று பலர் கிண்டலடிப்பதையும் பொருட்படுத்தாது தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க முயன்று வருகின்றார்.

வயது முதிர்ந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கு சேவை ஆற்றிவருபவர். வி.பு தலைவர் பிரபாகரன் 20ஆம் ஆண்டில் ஒன்றுபடுத்திய தமிழ் கட்சிகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்து ஐனநாயக அரசியல் முன்னெடுக்க வழிவகுத்துக் கொடுத்தார்.

தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முள்ளிவாய்க்காலின் பின் முழுமையாகப் பொறுப்பேற்றவர் திரு.சம்பந்தன். அவர் பொறுப்பேற்று அரசியல் ஞானத்துடன் இராஐதந்திரியாக முன்னெடுத்து வருகிறார்.

இனவாத சிங்கள கட்சிகளின் மத்தியில் தமிழர்களின் அரசியல் உரிமையைப் பெறுவதற்கு போராடி வருகின்றார். எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் மக்களின் உரிமைக்குப் போராடிய ஒரு தமிழன்.

இலங்கையில் நல்லாட்சியை உருவாக்க தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து போராடி வெற்றி கண்டவர். இனத்துவேசம் நிறைந்த அரசின் மனநிலையை மாற்றி தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க பரிந்துரைப்பவர். கடந்த பத்து ஆண்டு காலத்தில் நடாளுமன்றத்திலும் பொதுமேடைகளிலும் ஆற்றிய உரைகள் தமிழர்களின் வரலாற்றில் பதியப்படவேண்டியவை.

1983 இனக்கலவரத்தின் விசாரணை, திருமலை மாவட்டத்தை தமிழர்களின் வரலாற்றுப் பூமி என ஆதாரத்துடன் பதிய வைத்தவர் திரு.சம்பந்தன்.

இதுவரையும் பல்வேறு துறையில் சம்பந்தன் எம்.பி ஆற்றிய உரைகள் தமிழர்களின் வரலாற்றுப் பதிவாகும். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைரவாக இருந்த போது 53 வெளிநாட்டு தூதரங்களின் தலைவர்களைச் சந்தித்து தமிழர்களின் நிலையை எடுத்துக் கூறியதன் மூலம் தமிழர்களின் பிரச்சினையை சர்வதேசமயமாக்கினார். அவருடைய இலக்கை நோக்கி பயணம் விரைந்து பெற்றிபெற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.