வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது  3 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். 

இதனையடுத்து கடந்த செவ்வாய்கிழமை 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இச் சோதனையில் வெளியான முடிவுகளில்  7 பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன்,  இன்று அதன் மிகுதி முடிவுகள் வெளியாகின. அதில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வகையில்  வவுனியா வடக்கு வீதி அபிவிருத்தி பணியாளர்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மேலும் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய பலரிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.