புறக்கோட்டை பிரதான  பஸ் நிலையத்திலிருந்து வேறு மாகாணங்களுக்கு புறப்படும்  தூர பிரதேச போக்குவரத்து சேவைகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இத்தீர்மானம் தொடர்பில்  நாளை மீள்பேச்சுவார்த்தை இடம் பெறும் என  இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை புதிய திட்டம்! -  Tamilwin

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் - 19 வைரஸ் தாக்கத்தின். காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பிரதான நகரங்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம்  தொடர்பில் நாளை  மற்றுமொரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

கல்வி பொதுதராதர பரீட்சைக்கு தோற்றும்   மாணவர்களுக்கும், பரீட்சை சேவையில் ஈடுப்படுபவர்களுக்கும் பொது போக்குவரத்து சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட  போக்குவரத்து சேவைகள் மாற்றமின்றிய விதத்தில்  இடம்பெறும். தனியார்  பஸ் சேவையில் ஈடுப்படுத்தப்படுவது குறித்து உறுதியான தீர்மானங்களை குறிப்பிட முடியாது. என்றார்