தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை-  டயகம பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. 

லிந்துலை நாகசேனை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த வாகனத்தில் பயணித்த நால்வரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.