மஸ்கெலியா நகரில் உள்ள விற்பனை நிலையங்களில் பணிபுரிவோர் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சகல வியாபார ஸ்தலங்களிலும் தொற்று நீக்கும் விசிறி வைத்திருப்பதையும்

கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் இடைவெளி பேணப்பட வேண்டும். இவ்விதியினை

மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுப்படும்.

அத்துடன் வர்த்தக நிலையம் முன் அறிவித்தலின்றி மூடப்படுவதுடன் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி தெரிவித்தள்ளார்.