கம்பஹா மாவட்டம் முழுவதுமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களம் முக்கிய விடயமொன்றை வெளியிட்டுள்ளது.

நாளைய தினம்(26.10.2020) கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகள் திறக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை காண்பித்து பணியாளர்கள் சேவைக்கு சமூகமளிக்க முடியுமென குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.