நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிந்த அலுத்கம, பேருவளை மற்றும் பயாகல ஆகிய பகுதிகளில் நாளை காலை (26.10.2020) 5.00 மணிக்கு  ஊரடங்கு தளர்த்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினல்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேற்படி ஊடரங்கு தளர்வை உறுதிபடுத்தியுள்ளார்.