கொழும்பு மாவட்டத்தின் மேலும் பல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கட ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.