ஹட்டன் நகரில் தற்போது ஐந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது ஹட்டனில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு ஹட்டன் - டிக்கோயா நகரசபை அறிவுறுதல் வழங்கியுள்ளது.

ஹட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்தே ஹட்டன் நகரில் சனநெரிசலைக் கட்டுப்படுத்த ஹட்டனில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் உடனடியாக மூடுமாறு ஹட்டன் - டிக்கோயா நகரசபைநகரசபையினரால் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.