நாட்டின் தென் பகுதிகளில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

New Course Announcement: Simplilearn's Digital Selling Foundation Program

நாட்டில் கம்பஹா மாவட்டம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பகுதிகளில் வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பான அறிவுறுத்தல் ஒவ்வொரு பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு வருகை தருவோர் தொடர்பான தகவல்களை 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.