மார்பில் பாய்ந்த வளர்த்த கடா..!

Published By: J.G.Stephan

25 Oct, 2020 | 10:56 AM
image

சத்ரியன்

* சிங்கள பௌத்தர்களால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம்,  கடைசியில்  சிறுபான்மைக் கட்சிகளின் உறுப்பினர்களை பெயர்த்தெடுத்தே,  தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது'

*‘20ஆவது திருத்ததில் தமது நலன்களை தக்க வைத்துக் கொள்வதற்கான கோட்டா, மஹிந்த, பசில் என்று மூவருக்கும் தனித்தனியான அணிகள் செயற்பட்டன. அத்துடன் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்த இரட்டைக்குடியுரிமையை அனுமதிக்கும் 17ஆவது சரத்து மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு 157வாக்குகள் கிடைத்திருந்தன’


பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் நிறைவேற்றியிருக்கிறது.

வாக்களிக்கமுடியாதசபாநாயகர் மஹிந்தயாப்பாஅபேவர்த்தனமற்றும்வாக்களிக்கவிரும்பாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் வாக்குகளை தவிர,பாராளுமன்றத்தில் 148 வாக்குகளை மாத்திரமே கொண்டிருந்தஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எட்டு பேரை தம்பக்கம் இழுத்துப்போட்டு,  தேவையான பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.

கடந்தகாலங்களில்ராஜபக்ஷஅரசாங்கத்துக்கு இதுபோன்ற நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்ட போதெல்லாம் முஸ்லிம் கட்சிகள் பிளவுபடுத்தப்பட்டு,  பெரும்பான்மைபலம்நிரூபிக்கப்பட்டதுபோன்றே, இம்முறையும் நடந்துள்ளது.

சிங்களபௌத்தர்களால்மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம்,  கடைசியில்  சிறுபான்மைக் கட்சிகளின் காலில் விழுந்துஅல்லது அவர்களின் உறுப்பினர்களை பெயர்த்தெடுத்தே,  தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ரிஷாத் பதியுதீனின் ஆதரவு தமக்கு தேவையில்லை என்றும்,  அவர்களுடன் பேரம் பேசப் போவதில்லை என்றும், அமைச்சர்கள் பலர் வீரம்பேசினாலும், அவரது கட்சியில் இருந்தும் ஆதரவு பெறப்பட்டிருக்கிறது.

தாமே அமைத்த அரசாங்கம்என்றும், அது தமது கைக்குள்ளேயே அடங்கியிருக்கும் என்றும்சிங்கள பௌத்தஅடிப்படைவாதசக்திகள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் தான்,  இந்தளவும் நடந்தேறியிருக்கிறது. 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம்,  சிங்கள பௌத்த அடிப்படைவாத சக்திகளைப்பொறுத்தவரைஒருஅவமானம்என்றேகூறலாம்.

அபயராமய விகாரையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரரும், எல்லே குணவன்ச தேரரும் வெளிப்படுத்திய கருத்துக்கள், இதனையே நிரூபிக்கின்றன.

இந்த அரசாங்கம் தாங்கள் உருவாக்கியது என்றும், ஆனால் தற்போது அது வேறு நபர்களை இணைத்துக் கொண்டு பயணிக்க முனைவதாகவும் அவர்கள் விசனத்துடன் கூறியிருந்தார்கள். கடைசிவரையில், அவர்களின் கருத்து ராஜபக்ஷ அரசாங்கத்தினால் செவிமடுக்கப்படவே இல்லை என்பதுதான் உண்மை.

இந்தத் திருத்தத்தை ஆதரித்த அரசாங்கத்துக்குள் இருந்தே, மூன்று அணிகள் வெளிப்பட்டன.   மஹிந்த ஆதரவு அணி, கோட்டாஆதரவு அணி, பசில் ஆதரவு அணி என அவை செயற்பட்டன. ஒவ்வொன்றும் தமது தரப்பின் நலன்களை உறுதி்ப்படுத்திக் கொள்வதில் காட்டிய சிரத்தையும், மற்றையதைப் பலவீனப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளையும், கடந்த வார அரசியலில் தெளிவாக காண முடிந்தது. 20 ஆவது திருத்த விடயத்தில் ஆளும்கட்சிக்குள் கடும் எதிர்ப்புகள் நிலவியிருந்தாலும்,  கடும் எதிர்ப்பு இருந்தது 17 ஆவது பிரிவின் மீது தான்.

அது இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை அரசியலில் ஈடுபடுவதற்கு இருந்த தடையை நீக்கும் பிரிவு. பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவருவதற்காகஉருவாக்கப்பட்டதுதான்இந்தப்பிரிவு. அதனைநீக்குவதற்கு கோட்டா அணியிலும், மகிந்த அணியிலும் இருந்த பசில் எதிர்ப்பாளர்கள், கடுமையாக முயன்றனர். வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல்வீரவன்ச, விஜேதாஸ ராஜபக்ஷ, திஸ்ஸ விதாரண என்று இந்த அணி பலமானதாக இருந்தது, வாக்கெடுப்புக்கு முதல்நாள் இவர்களை அழைத்து பேசி சமாளித்துக் கொண்டார் ஜனாதிபதி.

இன்னும் ஒரு வருடத்தில், புதிய அரசியலமைப்பு வரும் என்றும், அதில் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களைஅனுமதிக்கும்விடயம்நீக்கப்படும்என்றும்ஜனாதிபதி உறுதியளித்தார். இதனை நம்பி எதிர்ப்பாளர்கள் அடங்கிப் போயினர்.ஆதரித்து வாக்களித்தனர். இதில்ஆச்சரியம் என்னவென்றால், 20 ஆவது திருத்தத்துக்கு கிடைத்தது 156 வாக்குகள், ஆனால் 17ஆவது சரத்துக்கு கிடைத்தது 157 வாக்குகள். இதிலிருந்தே, ஒவ்வொரு அணியும் எந்தளவுக்கு தம்மைப் பலப்படுத்துவதற்கு முயன்றிருக்கின்றன என்பது வெளிப்படையாக தெரிகிறது. இரட்டைக் குடியுரிமை விடயத்தில் எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அடங்கிப் போனதுதான்அதைவிட ஆச்சரியம்.

தமது கொள்கைக்கு முரணானது, தேர்தல்விஞ்ஞாபனத்துக்குஎதிரானது, மக்களின்ஆணைமீறுவதுஎன்று கூறியவர்கள், அமெரிக்கர்களும், சீனர்களும் மட்டுமன்றி புலம்பெயர் புலிகளும் உள்ளே வந்து விடுவார்கள் என்று கூறியவர்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போயினர்.

இங்கு ஏமாந்து போனது- இவர்களைநம்பி,  வாக்களித்த மக்கள் தான். அடுத்த ஆண்டு புதிய அரசியலமைப்பில் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்  அரசியலில் பங்கெடுப்பதை தடுக்க முடியும் என்றால், அதை ஏன் இப்போதே செய்ய முடியாது? என்ற சாதாரண கேள்வியைக் கூட,இவர்களால் ஜனாதிபதியிடம் எழுப்ப முடியாமல் போனது. இந்த இடத்தில், இடதுசாரிகளும் சரி, சிங்கள தீவிர வலதுசாரிகளும் சரி, ராஜபக்ஷ குடும்ப அரசியல் ஆதிக்கத்துக்கு முன்பாக தோற்றுப் போயினர். அதுபோலத் தான், சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்கும், குறிப்பாக தீவிர நிலைப்பாடு கொண்ட பௌத்த பிக்குகளுக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

அவர்கள் இரண்டு விடயங்களுக்காக, 20ஆவது திருத்தத்தை எதிர்த்தார்கள்.

முதலாவது, கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின்னர், வரக்கூடிய ஜனாதிபதியிடம் இந்த அதிகாரங்கள் கிடைத்தால், அதனை அவர் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்று பயந்தார்கள்.  அதனால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. இதனை, ஞானசார தேரர், எல்லே குணவன்ச தேரர், முருத்தெட்டுவே அனந்த தேரர், போன்ற பலர் கூறியிருக்கிறார்கள். இவர்களின் எதிர்ப்போ, அமரபுர- ராமன்ய பீடங்களின் எதிர்ப்புகளோ, ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கண்டுகொள்ளப்படவில்லை.

இரண்டாவதாக, பசில் ராஜபக்ஷவுக்காக திறக்கப்படும் கதவுகள் வழியாக புலம்பெயர் தேசங்களில் இருந்து புலிகளும் வந்து விடுவார்கள் என்று  அவர்கள் பயந்தார்கள். அதனால், இரட்டைக் குடியுரிமை  கொண்டவர்களை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கும் திருத்தத்தை கடுமையாக எதிர்த்தார்கள். அவர்கள் பசில், கோட்டா, மஹிந்த என்ற தனிமனிதர்களைக் கடந்தே இந்த விடயங்களைப் பார்த்தார்கள். ஆனால், அரசாங்கம் மகாசங்கத்தையோ, பௌத்த பிக்குகளையோ, இந்த விடயத்தில் கவனத்தில் கொள்ளவில்லை. அவர்கள், தங்களின் குடும்ப அதிகாரத்திலேயே குறியாக இருந்தார்கள்.

அரசாங்கத்துக்குள் மூன்று அணிகள் வெளிப்பட்டிருந்தாலும், எல்லாமே, ராஜபக்ஷகுடும்ப அதிகார விரிவாக்கத்தில் உறுதியாக இருந்தன. இந்த இடத்தில், அவர்களை அதிகாரத்துக்கு கொண்டு வந்த பௌத்த சிங்கள, அடிப்படைவாதம் கழற்றி விடப்பட்டது.

சிறுபான்மை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக- அடிப்படைவாதிகளாக அடையாளம்காட்டியவர்களே, அவர்களின் ஆதரவுடன் தம்மைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவை பௌத்தத்தின் காவலராகவும்,  கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து வந்தது பௌத்த மதத்தின் பேரெழுச்சியாகவும் கொண்டாடி வந்த சிங்களபௌத்த கடும் போக்காளர்களுக்கு இது பேரிடியாகஅமைந்திருக்கிறது. 20 ஆவது திருத்தச் சட்டம்மீதானவிவாதத்தில் உரையாற்றியபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது குடும்பத்தை இலக்கு வைத்தே 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது என்று கூறியிருந்தார். அது எந்தளவுக்கு உண்மையோ, அதுபோலத தான், 20 ஆவது திருத்தமும் ராஜபக்ஷ குடும்பத்துக்காகவே கொண்டு வரப்பட்டிருக்கிறதுஎன்பதும், உண்மை.

இங்கு ராஜபக்ஷ குடும்பத்தின் அதிகாரம் தான் அரசியலில் முதன்மை பெற்றிருக்கிறது. இந்த இடத்தில் சிங்கள பௌத்த அடிப்படைவாதம் யாரை வளர்த்தெடுத்ததோ, அவர்களே அதனை எட்டிஉதைத்துவிட்டிருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முற்றுகைக்குள் யூ.எஸ். எயிட் நிறுவனமும் அரசாங்க...

2025-02-19 09:53:29
news-image

ரணில் தரப்புடன் கூட்டு ; காலை...

2025-02-18 13:26:36
news-image

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...

2025-02-17 21:09:44
news-image

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின்...

2025-02-18 11:22:36
news-image

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...

2025-02-17 14:25:08
news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58