இந்தியா, மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாரிய தீப்பரவலானது இறுதியாக இன்று காலை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீப்பரவலானது இன்று அதிகாலை 5.08 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் கட்டிடத்தின் பல கடைகளில் கையடக்கத் தொலைபேசிகள், மின்கலங்கள், மின்னேற்றிகள் மற்றும் கம்பிகள் போன்ற பல எரியக்கூடிய பொருட்கள் இருப்பதால், குளிரூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தீயணைப்பு பிரிவு அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 228 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. 

இதன்போது மூச்சுத் திணறல் காரணமாக துணை தீயணைப்பு அதிகாரி உட்பட ஆறு தீயணைப்பு வீரர்கள் நகரின் நாயர் வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்.

தீப் பரவலானது ஐந்தாம் நிலையை அடைந்த பின்னர் 55 மாடிக் கட்டிட வளாகத்தில் அடர்த்தியான புகை சூழ்ந்தமையினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த 55 மாடிக் கட்டடத்தில் இருந்த சுமார் 3,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.