கொரோனா வைரஸால் மாறிய நுரையீரல்

Published By: Digital Desk 4

25 Oct, 2020 | 10:45 AM
image

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணமடைந்த ஒருவரின் உடற்கூறாய்வில் அவருடைய நுரையீரல் எதிர்பாராத அளவிற்கு மாற்றம் அடைந்திருப்பதை இந்திய தடவிய மருத்துவர் தினேஷ் ராவ் கண்டறிந்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது.

கொரோனா பாதித்து மரணமடைந்த ஒருவரின் சடலம் அவர் மரணமடைந்த 15 மணி நேரத்திற்கு பிறகு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உயிரிழந்த நோயாளியின் கழுத்து, முகம், தோல் மற்றும் மூச்சு குழாய் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. ஆனால் ஆர் டி பி சி ஆர் பரிசோதனையில் அந்த நபரின் மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் கொரோனா வைரஸ் மறைந்து இருந்தது கண்டறியப்பட்டது. 

பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் என்பது பஞ்சாலான பந்து போன்று மென்மையாக காணப்படும். ஆனால் மரணமடைந்த நபரின் நுரையீரல் தோலால் செய்யப்பட்ட பந்துபோல் கடினமாகவும், எடை கூடுதலாகவும் இருந்துள்ளது. நுரையீரல் என்றால் வழக்கமாக 600 அல்லது 700 கிராம் தான் எடை கொண்டதாக இருக்கும். ஆனால் கொரோனாவால் இறந்த நோயாளியின் நுரையீரல் மட்டும் இரண்டு கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக இருந்தது. அதனை தொடும்போது மென்மையாக இல்லை. மிக கடினமாக இருந்தது. 

அத்துடன் இரத்த திட்டுகளும் காணப்பட்டன. இதன் மூலம் கொரோனா வைரஸ், நுரையீரலை எப்படி பாதித்திருக்கும் என்று எண்ணும் போது அதிர்ச்சியாக இருந்தது.

இறந்த மனிதரின் உடலில் கொரோனா வைரஸ் இறந்து விட்டதைப் போல் காணப்பட்டாலும், இறந்தவரின் உடலில் பதினைந்து மணித்தியாலங்களுக்கு மேலாக அவை உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. அத்துடன் இறந்தவர்களின் உடலிலிருந்து பாக்டீரியா தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 

மேலும் இது தொடர்பாக கூடுதல் ஆராய்ச்சிகள் அவசியப்படுகின்றன. அதேபோல் மேலைத்தேய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய மரணத்தை போன்று- பாதிப்பை போன்று, தெற்காசிய நாடுகளில் ஏற்படவில்லை. தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு வேறு வகையினதாக இருந்தது.' என்றார்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34
news-image

புராஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-02-26 17:21:25
news-image

புலன் இயக்க பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்...

2025-02-25 18:33:10