வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தல் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இத‍ேவேளை நேற்றைய தினம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் பூட்டப்பட்டது. 

குறித்த துறைமுகத்துடன் தொடர்புபட்ட மீன் வியாபாரிகள் பலர் பேலியகொடை பகுதிக்கு சென்று வந்தமையின் காரணமாக இந்த கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.