தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சம்சுங் ( Samsung) குழுமத்தின் தலைவர் லீ குன்-ஹீ ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

78 வயதான லீ குன்-ஹீ மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் உயிரிழந்துள்ளதாக சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1942 ஆம் ஆண்டில் பிறந்த லீ, அவரது தந்தையும் சாம்சங் நிறுவனருமான லீ பியுங்-சல்லின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி 1987 ஆம் ஆண்டு முதல் சாம்சங் குழுமத்தை வழிநடத்தியுள்ளார்.

லீ குன்-ஹீ 2014 மே மாதம் ஏற்பட்ட மாரடைப்பின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு குறித்து சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் பத்திரிகை அலுவலகம்,

"சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ காலமானதை நாங்கள் கவலையுடன் அறியத் தருகிறோம். 

தலைவர் லீ அக்டோபர் 25 ஆம் திகதி துணைத் தலைவர் ஜே ஒய் லீ உட்பட அவரது குடும்பத்தினருடன் காலமானார்.

"தலைவர் லீ ஒரு உண்மையான தொலைநோக்கு பார்வையாளர், சம்சுங்கை ஒரு உள்ளூர் வணிகத்திலிருந்து உலக முன்னணி கண்டுபிடிப்பாளராகவும் தொழில்துறை அதிகார மையமாகவும் மாற்றியவர் அவர் " என தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.