வடக்­கி­லுள்ள பொது மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி­களை விடு­விப்­பது தொடர்பில் இரா­ணு­வத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்றோம். இதன்­பி­ர­காரம் ஜன­வரி மாத­ம­ளவில் மீத­முள்ள காணி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­யளித்தார்.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின் போது இரண்டு தரப்­பி­ன­ராலும் குற்­றங்கள் இழைக்­கப்­பட்­டுள்­ளன. இது குறித்து உண்­மை­களை கண்­ட­றிந்து விசா­ரணை செய்து குற்றம் இழைத்­த­வர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

சர்­வ­தேச மனித உரி­மைகள் தினத்தை முன்­னிட்டு சிவில் அமைப்­புகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து நேற்று

சுதந்­தி­ரத்­திற்­கான அரங்கம் என்ற தொனிப்­பொ­ருளில் கீழ் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்இ

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் இவ்­வாறு மனித உரி­மைகள் தினம் கொண்­டா­டப்­படும் என்று நாம் யாவரும் நினைத்து கூட பார்த்­தி­ருக்க மாட்டோம். கடந்த காலங்­களில் மனித உரி­மைகள் தினம் அனுஷ்­டிக்க கூடிய சூழல் இலங்­கையில் காணப்­ப­ட­வில்லை. எனினும் ஜன­வ­ரிக்கு பின்னர் அதற்­கான சூழல் முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு சிவில் அமைப்­பு­களின் பங்­க­ளிப்பு மிகவும் அளப்­ப­ரி­ய­தாகும். இதற்­காக வீதி­யி­லி­றங்கி பாரிய போராட்­டங்­களை நடத்­தி­யது சிவில் அமைப்­பு­க­ளாகும்.

கடு­மை­யான போராட்­டங்­க­ளுக்கும் தியா­கங்­க­ளுக்கும் மத்­தியில் ஜன­வரி புரட்­சியை வெற்­றிக்­கொண்டோம். இனங்­க­ளுக்­கி­டையில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு புதிய அர­சாங்­கத்­தினால் பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­துள்ளோம். எனினும் இறு­தியில் தேசத்­து­ரோகி நாமமே எனக்கு கிடைத்­தது.

ஜன­வரி 8 ஆம் திகதி வெற்­றிக்­கொண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தினார். ஜன­நா­யக ரீதி­யாக பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக முடிப்­ப­தற்கு பாரிய தியா­கங்­களை அவர் முன்­னெ­டுத்­துள்ளார். இதன்­படி நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யுள்ளோம். ஜன­வரி 8 ஆம் திகதி புரட்­சிக்கு எதி­ராக மாற்று புரட்சி முன்­னெ­டுப்­ப­தற்கு சில குழு­வினர் தயா­ராகி வரு­கின்­றனர்.

முன்­னைய ஆட்­சியின் போது 44 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்­தப்­பட்டும் கொலை செய்­யப்­பட்டும் உள்­ளனர். இவ்­வாறு ஜன­நா­யகம் குழி தோண்டி புதைக்­கப்­படும் போது மாற்று புரட்சி செய்ய கூடி­ய­வர்­களின் கண்­ணுக்கு புலப்­ப­ட­வில்லை. மக்­களின் சேவைக்கு உரித்­தான வைத்­தி­யர்கள் ராஜ­ப­க்ஷ­வி­னர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர்.

தற்­போது விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ரான போரின் போது யுத்­தக்­குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் ஊடாக முழு சர்­வ­தேச நாடு­க­ளையும் ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு கொண்டு வரு­வ­தற்கு எம்மால் முடிந்­துள்­ளது.

விடு­தலை புலிகள் இயக்­க­மா­னது மிகவும் கொடூ­ர­மான பயங்­க­ர­வா­த­மாகும். இதனை சர்­வ­தே­சமும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. யுத்­ததின் போது இரு தரப்­புக்­க­ளி­னாலும் குற்­றங்கள் இழைக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே இது தொடர்பில் உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட வேண்டும். இத­னூ­டாக குற்றம் இழைக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மாயின் உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்டும்.

அத்­துடன் காணாமல் போனோர் தொடர்­பி­லான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு விசேட அலு­வ­ல­க­மொன்றை கட்­ட­மைக்­க­வுள்ளோம். மேற்­படி கட்­ட­மைப்பின் கீழேயே உள்­ளக விசா­ரணை பொறி­முறை அமையும். எமது வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சிவில் அமைப்­பு­களின் பொறி­மு­றைகள் கட்­டாயம் தேவை­யாகும்.

அதே­போன்று எமது ஆட்­சியின் போது வடக்கில் பொது மக்­க­ளுக்கு சொந்­த­மான காணிகள் ஏக்கர் கணக்கில் விடு­விக்­கப்­பட்­டன. எனினும் மிகு­த­முள்ள காணி­களை விடு­விப்­பது தொடர்பில் இரா­ணு­வத்­துடன் நாம் பேச்­சு­வார்த்தை ர்த்தை நடத்தி கலந்துரையாடி வருகின்றோம். வடக்கில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளிலும் முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆகையால் இது தொடர்பில் ஆராயந்து வருகின்றோம். இதன்படி ஜனவரி மாதமளவில் மிதமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

மேலும் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பிலான சர்வதேச சாசனத்திற்கு கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆகவே புதிய பயணத்திற்கு எம்முடன் இணையுங்கள் என்றார்.