சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த போதும் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, சூரரைப்போற்று படம் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய கதைக்களத்தை கொண்டது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி உள்ளதாகவும் இன்னும் சில என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் படம் திட்டமிட்டபடி 30ஆம் திகதி வெளியாகாது என கூறி இருந்தார்.
இந்நிலையில், அப்படத்திற்கு விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்துவிட்டதாக 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய விமானப்படைக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அத்துடன் “சூரரைப்போற்று” திரைப்படத்தின் ட்ரெய்லர் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்படத்தை தீபாவளி பண்டிகையன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நயன் தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படமும் தீபாவளியன்று ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM