உடன் அமுலுக்கு வரும்வகையில்  கொழும்பு மாவட்டத்தின் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, பாபர் வீதி, கரையோர பொலிஸ் பிரிவு ஆகியவற்றுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித் துள்ளார்.

ஏற்கனவே, மேல் மாகாணத்தின் 51 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொழும்பு மாவட்டத்தின் மேலும் 05 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் ஊரடங்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அத்துடன் இவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் ஊரடங்கு காலப்பகுதியில் பயண அனுமதிப்பதிரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.