கொழும்பு மெனிங் சந்தை நவம்பர் முதலாம் திகதிவரை மூடப்படவுள்ளதாக மெனிங்  சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நெருக்கடியை கருத்தில் கொண்டு பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ் நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மெனிங் சந்தை மூடப்பட்டும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.