நாட்டில் மேலும் 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பெலியகொட மீன் சந்தை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 140 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 37 பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 24 பேருக்கும், இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,354 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 3,625 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 23 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா 3,714பேர் குணமடைந்தும் 15 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.