மூளை புற்றுநோய், எதிர்பாராத விதமாக மூளையில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்துதல் மற்றும் மூளை பக்கவாதம் ஆகியவற்றை குணப்படுத்துவதற்காகவும், மூளையில் லேசர் சிகிச்சையை மேற்கொள்வதை எளிதாக்கவும் தற்போது மூளைக்கு வெளிப்புறத்தில் அதாவது மண்டையோட்டின் உட்புறத்தில் பொருத்தக்கூடிய வெளிப்படைத்தன்மையான மருத்துவ கருவியொன்றும், இதனூடாக செலுத்தப்படும் நவீன லேசர் சிகிச்சையொன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
உலகைப் பெரிதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது புற்றுநோய். வயது வித்தியாசமின்றி, பாலினப் பாகுபாடின்றி, யாருக்கு வேண்டுமானாலும், உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம் என்ற நிலை உள்ளது. மாறி வரும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு, மன அழுத்தம், புகை மற்றும் மதுப் பழக்கம் போன்றவை புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணிகளாக உள்ளன.
ஒருசில புற்றுநோய்களைத் தவிர மற்றப் புற்றுநோய்களை முன்கூட்டியே தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. புற்றுநோய் தாக்கிய இடத்தில் அறுவைசிகிச்சை மூலம் உறுப்பு அகற்றம், கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்றவை அலோபதி மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையாக அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் பக்கவிளைவுகள் ஏராளம். அது மட்டுமல்லாமல் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோயை மட்டுமே முழுமையாகக் குணப்படுத்த முடிகிறது. முற்றிய நிலையிலான புற்றுநோய்க்கு மரணமே வாசலாக உள்ளது.
இந்நிலையில் ஆட்கொல்லி நோயாகப் பொதுமக்களை அச்சுறுத்திவரும் புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்துவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் ஸ்கல் எனப்படும் மண்டையோட்டில் பொருத்தக்கூடிய Yttria = Stablized Zirconia (YSZ) என்ற கருவி கண்டறியப்பட்டுள்ளது. செராமிக்கால் ஆன இந்த கருவியின் வெளிப்படைத்தன்மை மூளையில் ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படும் அனைத்துவித பாதிப்புகளையும் லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்த உதவுகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டொக்டர் V.சீனிவாசன் M.S.,
நரம்பியல் மருத்துவ நிபுணர்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM