தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் இருந்து பயணிகள் கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகை விகாரைக்கு வருகை தருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்ரீ தலதா மாளிகையில் மத வழிப்பாட்டு அனுஷ்டானங்கள் வழமை போல் நடைபெறுவதாக  அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.