பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் வேகமாக கொரோனா தொற்று பரவியமைக்கான காரணத்தை வைத்தியர் வெளியிட்டுள்ளார் 

பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில்  கடந்த 4 நாட்களில் 471 பேர்  கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் அது  ஐந்து மடங்கு அதிகரிப்பு என கொழும்பு மாநகர  சபையின் பிரதம சுகாதார அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமையில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் வைரஸ் இலகுவில் பரவுவதற்கான குளிரூட்டும் நிலைமை அதிகரித்து காணப்பட்டமையே பிரதான காரணம் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,153 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக நேற்று (23.10.2020) 866 பேர் தொற்றுடன் இனம் காணப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.



866 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அது ஒரு நாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர்கள் எண்ணிக்கையாகும்.