சபுகஸ்கந்தவிலுள்ள பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள  இராணுவ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாககொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மீன் வாங்குவதற்காக இராணுவ அதிகாரி சமீபத்தில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.