இலங்கைக்கான கொரிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

Published By: Digital Desk 3

24 Oct, 2020 | 11:56 AM
image

(நா.தனுஜா)

கொரிய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் கொண்டிருப்பதாக அந்நாட்டு தூதுவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அறிவித்திருக்கிறார்.

இலங்கைக்கான கொரிய தூதுவர் வுன்ஜின் ஜியோங் நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என்று குறிப்பிட்ட கொரிய தூதுவர், இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுத்தார். 

பல தசாப்தகாலமாகவே கொரியா இலங்கையின் மிகமுக்கிய முதலீட்டாளராக இருந்துவருவதுடன், தற்போது 115 இற்கும் அதிகமான கொரிய நிறுவனங்கள் இலங்கையில் இயங்கிவருகின்றன.

அதேபோன்று கடந்த வருடத்தில் இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற மொத்த வர்த்தகப்பெறுமதி 327 மில்லியன் டொலர்களாகும். அதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதை கலந்துரையாடலில் ஈடுபட்ட இருவரும் ஏற்றுக்கொண்டனர்.    

மகிந்த ராஜபக்ஷ, வுன்ஜின் ஜியோங்

மேலும் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் பெற்றுக்கொண்ட அமோக வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்த கொரிய தூதுவர், அத்தகைய பெரும்பான்மையான மக்களின் ஆதரவிற்குக் காரணம் அவர்களின் நம்பிக்கையே என்று குறிப்பிட்டார்.

அத்தோடு கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை இலங்கை எதிர்கொள்ளும் விதத்தைப் பாராட்டிய கொரிய தூதுவர், அதனைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கத்தாயார இருப்பதாகவும் உறுதியளித்தார். 

இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தக்கூடிய துறைகளான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா ஆகியவை தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு கொரிய பிரதமருடன் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பில் இதன்போது நினைவுகூர்ந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பதிலளித்த கொரிய தூதுவர் அந்நாட்டு பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 00:35:32
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51