நிலையான மற்றும் ஒழுங்கு முறையான உணவு வர்த்தகத்திற்கான எதிர்காலம் 

Published By: Priyatharshan

22 Jul, 2016 | 11:36 AM
image

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட Ma’s நிறுவனம் இன்று இலங்கையின் முன்னணி குடும்ப உணவு தீர்வு வழங்குநராக வளர்ச்சியடைந்துள்ளது.

உயர் தரமானதும், உடனடியாக உட்கொள்ளக்கூடிய உணவு வகைகளையும் மட்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தையில் வழங்கிவரும் அங்கீகாரத்துடன், குடும்பத்திற்கு சொந்தமான இந் நிறுவனமானது சமூகத்தின் மீதான அதன் அர்ப்பணிப்பை நிரூபனம் செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சான்றளிக்கப்பட்ட ஒழுங்குமுறையாக உற்பத்தி செய்யப்பட்டதும், நிலையான உற்பத்திகளையும் அறிமுகம் செய்ததன் விளைவாக, MA’S Kitchen ஆனது மேலும் இலங்கை முழுவதும் உள்ள சேதன மற்றும் சான்றளிக்கப்பட்ட சிறிய விவசாய குழுக்களை ஒருங்கிணைத்து வருகிறது.

சான்றளிக்கப்பட்ட தரங்களுக்கமைய உணவுகள் உற்பத்தி செய்வதை விஞ்சிடும் வகையில் organic  மற்றும் fair’ திகழ்கிறது. சமூக தொழில் முனைவோர் குடும்பத்திற்கு, சமூகம் மற்றும் இயற்கைக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு மிகப்பெரியது. எமது நிறுவனத்தை ஸ்தாபிக்கும் போது இந்த கோட்பாட்டின் மீதே நாம் நம்பிக்கை வைத்திருந்ததுடன், இந்த மரபினை அடுத்த தலைமுறையினருக்கும் வழங்கவுள்ளோம்.

தம்புள்ள, மாத்தளை, மினுவங்கொட, ஹக்கம போன்ற பிரதேசங்களிலுள்ள வெவ்வேறு கிராமிய விவசாய சமூத்திருடன் நாம் பணியாற்றியதையிட்டு பெருமையடைவதுடன், எமது புதிய திட்டமாக வடக்கில் Lyakkachch  இனை ஆரம்பித்துள்ளோம்” என Ma’s Kitchen இன் முகாமைத்துவ பணிப்பாளர் மரியோ அல்விஸ் தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலியைத் தாண்டிய பேண்தகைமை என்பதற்கமைய ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனத்தின் கோட்பாட்டுக்கிணையாக, இந் நிறுவனமானது நாட்டின் உணவு பதப்படுத்தல் மற்றும் விவசாய வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பில் செயலாற்றி வருகிறது. இலங்கை உணவு பதப்படுத்துநர் சங்கம் மற்றும் தேசிய வேளாண் வர்த்தக சபை ஆகியவற்றின் ஸ்தாபக உறுப்பினராக MA’s திகழ்கிறது. இந்த நிறுவனம் அதன் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு, ஜுலை மாதம் 26 ஆம் திகதி மாலை “நிலையான உணவு வர்த்தகம்” எனும் செயலமர்வினை ஒழுங்கு செய்துள்ளது. 

இந்நிகழ்வில் உலகின் பல்வேறு பகுதிளைச் சேர்ந்த விசேட நிபுணர்களுடன் பல்வேறு தலைப்புகளின் கீழ் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. தனியார் துறை, மற்றும் அரசாங்க திணைக்களங்களைச் சேர்ந்தவர்களிடம் தகவல்களை பகிர்ந்து விழிப்புணர்வூட்டுவதே இந்நிகழ்வின் எதிர்பார்ப்பாகும்.

இந்த நிகழ்வில் நான்கு மிகப்பெரிய தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஐரோப்பாவின் முன்னணி மற்றும் வெற்றிகரமான சேதன வர்த்தக நிறுவனத்தின் ஸ்தாபகரின் தலைமையின் கீழ், உலகளாவிய சேதன உணவு நிலைமைகள் மற்றும் அதன் தற்போதைய போக்குகள் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பிலான ‘உலகளாவிய சேதன சந்தை’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

“உலக Fairtrade சந்தை’ தலைப்பிலான கலந்துரையாடலை ஐரோப்பாவின் மிகவும் பழைமையான Fairtrade நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளர் தலைமை தாங்கவுள்ளார். 

மேலும் மூன்றாவதாக ‘சமூக வர்த்தகம்’ எனும் தலைப்பிலமைந்த கலந்துரையாடலினை ஜப்பான் முழுவதும் உள்ள இளம் சமூக தொழில் முனைவோருக்கான வசதிகளை ஏற்படுத்தி ஜப்பானின் ஒழுங்குமுறையான வர்த்தகத்திற்கு புத்துயிர் அளித்த அந்நாட்டின் புகழ்பெற்ற வர்த்தக குழுமத்தின் தலைவரும், சமூக தொழில் முனைவராகவும் இருப்பபவரினால் தலைமை தாங்கப்படவுள்ளது. 

இறுதிக் கலந்துரையாடலான ‘நவீன உணவு வர்த்தகத்திற்கான சமூக இணப்பாட்டின் பெறுமதி’ எனும் தலைப்பினை தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் ஒழுங்குமுறையான மற்றும் நிலையான வர்த்தகங்களின் மீது முதலீடு செய்வதில் முன்னோடியான இந்தியாவின் புகழ்பெற்ற சமூக சமத்துவ நிதியான அவிஷ்கார் ஃபோரன்டயர் நிதியத்தின் பங்காளர் ஒருவரினால் தலைமை தாங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் நிலையான மற்றும் ஒழுங்குமுறையான வர்த்தகம் மீது கவனம் செலுத்திவரும் உணவு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் நிபுணர்கள், விவசாய வர்த்தகங்கள், விவசாய நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரை Ma’s  வரவேற்கிறது. இந்நிகழ்வு அழைப்பிதழ் அடிப்படையிலும் முதலில் வருகை தருபவர் அடிப்படையிலும் குறிப்பிட்ட பங்குபற்றுநர்களுக்கே பங்குகேற்க முடியும்.

ஆர்வமுள்ளோர் Ma’s இன் பொது அழைப்பு இலக்கமான +94117602200 ஊடாக நதீரவையோ அல்லது info@masfoods.lk ஊடாகவோ பதிவு செய்து கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல்...

2024-06-13 18:52:47
news-image

பூமிக்கு 2,000 மரங்கள் : உலக...

2024-06-13 15:53:57
news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11