இருபதும் எட்டும்!

Published By: Gayathri

24 Oct, 2020 | 09:53 AM
image

20 ஆவது திருத்தத்தை அரசாங்கம் வெற்றி கொள்ளும் என்பது தெரிந்த விடயம். இருந்தபோதிலும் இந்த இருபதுக்கு பின்னால் யாரெல்லாம் எதிர்த் தரப்பில் இருந்தும் தாவுவார்கள் என்பது தான் சற்று புரியாமல் இருந்தது.

தற்பொழுது கட்சித் தலைவர்கள் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறுகிறார்கள். 

இது எந்தளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. எந்த ஒரு கட்சியிலும் அதுவும் அரசியலில் அதில் உள்ள உறுப்பினர்கள் ஆரம்பம் தொட்டே இலாப நஷ்ட கணக்கு பார்த்தே அதில் இணைவதுண்டு.

இது கட்சியின் தலைவருக்கும் தெரிந்தவிடயம். பல சமயங்களில் கட்சித் தலைவர்கூட இதற்கு விதிவிலக்கல்ல. அந்த வகையில் உண்மையில் ஏமாற்றப்பட்டவர்கள் மக்கள்தான்.

சரி அது போகட்டும். ஜே .வி .பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள்  இங்கு முக்கியமானவை.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார் அதில் அவர்:

தனிச்சிங்கள ஆட்சியமைப்பதாகக் கூறி இனவாத பிரசாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற அரசாங்கம், தற்போது முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவுடனேயே 20ஐ நிறைவேற்றிக் கொண்டது. 

தற்போதைய அரசாங்கம் பௌத்த மக்கள் மத்தியில் ஏனைய மதங்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி தனி சிங்கள ஆட்சியமைப்பதாக அந்த மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்றது. 

ஆனால் தற்போது ஹக்கீம், ரிஷாத் ஆகியோரின் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடனேயே 20 ஐ நிறைவேற்றிக் கொண்டுள்ளது. உண்மையில் அரசாங்கத்திற்கு 20 ஐ நிறைவேற்றிக் கொள்வதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படவில்லை. 

பங்காளிக்கட்சிகளுடன் இணைத்து ஆளுந்தரப்பில் 150 உறுப்பினர்கள் உள்ளனர். அவற்றில் சபாநாயகரை தவிர்த்தால் 149 உறுப்பினர்கள். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே அரசாங்கத்திற்கு 148 வாக்குகள் மாத்திரமே காணப்பட்டது. அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல.

மூன்றில் இரண்டுக்கு 3 வாக்குகளே தேவைக்கப்பட்ட போதிலும் சஜித் தரப்பில் 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தை சுலபமாகக் காப்பாற்றிவிட்டனர். 

பதவிக்காகவும் பணத்திற்காகவும் காட்டிக்கொடுக்கும் உறுப்பினர்கள் சஜித் தரப்பிலேயே உள்ளனர் என்பதை நாம் ஆரம்பத்திலேயே மக்களுக்கு தெரிவித்துள்ளோம். 

எனவே, இனியாவது இனவாதத்திற்குள் சிக்கி ஏமாறாமல் சிந்தித்து செயற்படுமாறு நாம் மக்களுக்கு வலியுறுத்துகின்றோம் என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

நிலைமை எவ்வாறு இருப்பினும் தற்போது 20ஆவது திருத்தச் சட்டம் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

எனவே, அது தொடர்பில் என்ன கூறியும் பயனில்லை என்பதே உண்மை.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07