மலையக உதவி ஆசிரியர்களின் இழுபறி நிலையில் இருந்த 419  உதவி ஆசிரியர்களுக்கான  நிரந்தர நியமனங்கள் முதல் கட்டமாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு  கொண்டுவந்ததையடுத்து கடந்தமாதம் நடுப்பகுதியில் மத்திய மாகாண ஆளுநர் லலித் .யூ. கமகே அவர்களுடன் பல சுற்று  கலந்துரையாடலின் பின்னர் இன்று வழங்கி நிரந்தர நியமனங்கள்வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள  கொரோன வைரஸ் தாக்கத்தின் காரணாமாக  ஒன்றுகூடல்களை தவிர்க்கும் அரசாங்கத்தின் கட்டளைக்குகேற்ப  முதற்கட்டமாக  சிலருக்கான நியமனக்கடிதங்கள்  இன்றய தினம்  கண்டியிலுள்ள  ஆளுநர் மாளிகையில் வைத்து  வழங்கிவைக்கப்பட்டது.

அத்தோடு ஏனைய  ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமன கடிதங்கள் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென ஆளுநர் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மத்திய மாகாணத்தில் தனது ஆசிரியர் பயிற்சியினை நிறைவு செய்து சான்றிதழ்களைப்  பெற்று தனது கோவைகளை பூர்த்தி செய்த 419 ஆசிரிய உதவியாளர்களுக்கு இலங்கை ஆசிரிய சேவை  தரம்  மூன்று, தரம் ஒன்றுக்கு உள்வாங்கப்படவுள்ளனர். 

இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான  துரை மதியூகராஜா, கணபதி கனகராஜ் முன்னாள் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் இன்றய தினம்  நியமனங்களை பெற்றுக்கொண்ட ஆசிரிய உதவியாளர்கள் உள்ளிட்ட பலர்கலந்துக்கொண்டனர்.