கொரோனா நிவாரணத் தொகையை 10 ஆயிரம் ரூபாவாக வழங்க வேண்டும் - சரத் பொன்சேகா

23 Oct, 2020 | 07:50 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கம், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கொரோனா  சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Articles Tagged Under: சரத் பொன்சேகா | Virakesari.lk

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் அதனை அரசாங்கம் சாதாரணமாக மதிப்பிடக்கூடாது.

நாம் அதனை வைத்து அரசியல் செய்யவோ அரசாங்கத்துக்கு சேறு பூசவோ முற்படவில்லை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலேயே நாம் கருத்தாக செயற்படுகின்றோம்.

அத்துடன் கொரோனவைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5ஆயிரம் ரூபாய் நிவாரணம் எந்தவிதத்திலும் போதாது. தற்போதுள்ள வாழ்க்கைச்செலவுக்கமைய அதனை 10ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

மேலும் அரசாங்கம் அந்த தொற்று தொடர்பில் மக்களுக்கு எதையும் மறைக்கக் கூடாது. உண்மையான தரவுகளை தெரிவிக்கவேண்டும் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கினால் மட்டுமே மக்கள் தமது பங்களிப்பை வழங்குவதற்கு உதவியாக அமையும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44