நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

தென்னகத்தின் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நெற்றிக்கண்'.

இப்படத்தை நடிகை நயன்தாராவின் காதலராக அறியப்படுபவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் 'பிகில்' பட புகழ் இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

'அவள்' படத்தை தொடர்ந்து இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கும் இந்த படத்திற்கு ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் இசை அமைக்கிறார்.

நடிகை நயன்தாரா முதன் முதலாக பொலிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்  வெளியானதும் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் வரவேற்கப்பட்டு வைரலாகி வருகிறது.