(இராஜதுரை ஹஷான்)

பஸ்களுக்கு வழங்கப்படும்  லீசிங்  கொடுப்பனவு நிவாரணத்தை இன்னும் 6 மாத காலத்துக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில், கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை முடிவடைந்தவுடன் நவம்பர் 9 ஆம் திகதி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக தனியார் பஸ் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

   அத்துடன் பேருந்து லீசிங் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கோரிக்கையை  ஒன்றையும் முன் வைத்துள்ளனர். எனினும் பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் எவ்வித  கோரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சங்கத்தினரது கோரிக்கையினை கருத்திற் கொண்டு தனியார் பஸ்களுக்கு வழங்கப்படும் லீசிங்  கொடுப்பனவு நிவாரணத்தை இன்னும் 6 மாத காலத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதகவும் பஸ் கட்டண அதிகரிப்பை தவிர்த்து ஏனைய சலுகைகளை தனியார் பஸ் சங்கத்தினருக்கு வழங்க பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.